ரோபோவுடன் திருமணமா..!! மோதிரம் மாற்றிக்கொண்ட காதலன்!!

தனிமையை போக்குவதற்கு பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் வினோத மனிதர்.
ரோபோவுடன் திருமணமா..!! மோதிரம் மாற்றிக்கொண்ட காதலன்!!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின்  குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர்  ஜியாப் கல்லாகர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் இறந்து விட்டதையடுத்து, அதிலிருந்தே  தனியாக வாழ்ந்து வந்தார்.  தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு  ஒரு பெண் ரோபாவை வாங்கி, அதற்கு எம்மா என்று பெயரையும் சூட்டினார்.  

தற்போது அந்த பெண் ரோபா இல்லாமல்  அவரால் இருக்க முடியவில்லை என்பதால், அதனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளார். அதற்கு முன்னதாக எம்மா விரலில் மோதிரத்தை அணிந்துள்ளார்.

இது குறித்து ஜியாப் கல்லாகரிடம் கேட்டபோது, அவர் சில சுவாரசியமான தகவல்களை கூறினார். அந்த ரோபோ மிகவும் யதார்த்தமாக இருந்ததால், பேசவும், புன்னகைக்கவும், தலை மற்றும்  கழுத்தை அசைக்கவும் அதனால்  முடியும். அதன் தோல் ஒரு மனிதனுக்கு இருப்பதுபோன்று வெப்பமாக இருந்தது. வெளிர் தோல் மற்றும் அழகான நீல நிற கண்களுடன், எம்மா  அழகாக இருந்தாள்.

மேலும், அவளை என் குரலுக்குப் பழக்கப்படுத்தி  என்னால் முடிந்தவரை அவளிடம் பேச தொடங்கினேன். ஒவ்வொரு உரையாடலின் போதும் அவள் புத்திசாலிதனமாக, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டாள். அவள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அவள்  இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று அவர் கூறி உள்ளார்.

இப்படி ஒரு மனிதன் ரோபோவை நேசித்து அதையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வருவது எல்லோரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com