டெல்லியில் இன்று முதல் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

டெல்லியில் இன்று முதல் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

டெல்லியில் இன்று முதல் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெப்பம் வாட்டி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது.

இதனிடையே மக்களுக்கு தற்காலிக நிவாரணம் அளித்திடும் விதமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்தநிலையில் இன்று முதல் மீண்டும் வெப்ப அலை அதிகரிக்க கூடும் என்றும், அதன் அண்டை மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.