அடுத்த மாதம் திரைக்கு வர இருந்த ’பேட்மேன்’ படத்தின் காட்சி இணையத்தில் லீக் - உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!!

அடுத்த மாதம் திரைக்கு வர இருந்த ’பேட்மேன்’ படத்தின் காட்சி இணையத்தில் லீக் - உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!!

அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருந்த பேட்மேன் படத்தின் ஆக்‌ஷன் காட்சியொன்று இணையதளத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. பேட்மேன் படத்தின் புதிய பாகம் வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதியன்று திரைக்கு வர இருந்தது.

இதில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்து உள்ளார். இதனை மேட் ரிவ்ஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமானது ஒரு மாதத்தில் வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சியானது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இது யாரோ செய்த வேலை என்பதில் உறுதியாக இருக்கின்றனர் படக் குழுவினர்.

இணையத்தில் யாரோ பார்த்த வேலையால் வெளியகியுள்ள காட்சியில் பேட்மேனாக நடித்துள்ள ராபர்ட் பேட்டிசன் ஒருவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருப்பார். அவ்வப்போது அந்த  இடத்தை நோக்கியவாறு கார் ஒன்று வருகிறது. வேகமாக வரும் அந்த கார் மோதுவதால் பலரும் காயமடைகின்றனர். அந்த காரில் இருந்து இறங்கும் முதியவர் ஒருவர் மனித வெடிகுண்டாக இருக்கிறார்.

அதற்கான ரிமோட் ஆனது வில்லனிடம் இருக்க அந்த முதியவரின் உடையில் டு தி பேட்மேன் என எழுதப்பட்டுள்ளது. இந்த காட்சியானது படத்தில் முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த காட்சியானது லீக் ஆன நிலையில் படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த காட்சியின் தெளிவான பிரின்ட்டை படக்குழுவே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதை வைத்தே படத்தை விளம்பரப்படுத்துவோம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.