தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; கணநேரத்தில் காப்பாற்றிய ஊழியர்!

தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; கணநேரத்தில் காப்பாற்றிய ஊழியர்!

மேற்குவங்க மாநிலம் பலிசாக்-கில், தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற ஒருவரை ரயில்வே நிலைய ஊழியர் காப்பாற்றினார்.

மேற்கு மிட்னாபூரில் உள்ள பலிசாக் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் சதீஷ்குமார், அந்த நேரத்தில் வந்த ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்காக நடைமேடைக்கு வந்தார்.

அப்போது தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததை கண்ட ஊழியர், பதறியடித்து ஓடினார். ரயில் வரும் சில வினாடிக்கு முன்பாக இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கிய சதீஷ்குமார், தண்டவாளத்தின் மறுபக்கத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.