பன்றிகுட்டிக்கு பால் கொடுக்கும் நாய்- வீடியோ வைரல்...

ஆந்திரா மாநிலத்தில் நாயிடம் தினமும் பால் குடிக்கும் பன்றிக்குட்டி குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பன்றிகுட்டிக்கு பால் கொடுக்கும் நாய்-  வீடியோ வைரல்...

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், சிங்கமலா கிராமத்தில் தெருநாய் ஒன்று  கடந்த மாதம் 7 நாய்குட்டிகளை ஈன்றது.. அந்த 7 நாய்குட்டிகளில் தற்போது 3 குட்டிகள் மட்டுமே உயிரோடு உள்ளன. இதற்கிடையில் தாய் நாயிடம் நாய்குட்டிகள் பால் குடித்து வரும்நிலையில், பன்றிகுட்டி ஒன்றும் தவறாமல் பால் குடித்து வருவது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

பால் குடிக்க வரும் பன்றிகுட்டியை தடுக்காமல் நாயும் பால் கொடுப்பது பார்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வை ஆச்சர்யத்துடன் பார்த்த பொதுமக்கள் தங்களது மொபைல்போனில் வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் பரவி வைராகி வருகிறது