உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் : மாட்டுச்சாணம் சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்ற அந்த நபர் பசுவின் சாணத்தை சாப்பிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் : மாட்டுச்சாணம் சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்ற அந்த நபர் பசுவின் சாணத்தை சாப்பிடுவது போன்ற அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  வீடியோவில், மிட்டல் நேரடியாக பசுக்கள் கட்டிவைக்கப்பட்டிருக்கும் தொழுவத்திற்கு சென்று தரையில் இருந்த பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிட்டபடி பேச்சு கொடுக்கிறார். சாணத்தை சாப்பிடுவதாலும் , ​​பசுவின் சிறுநீரைக் குடிப்பதாலும் ஏற்படும் நன்மைகளை பற்றி மருத்துவர் மிட்டல் அந்த வீடியோவில் விளக்குகிறார்.

இந்த இரண்டு செயல்களும் பல கடுமையான நோய்களைத் தடுக்க உதவுகின்றன. மேலும், சுகபிரசவத்திற்கு பெண்கள் பசுவின் சாணத்தை உண்ண வேண்டும் என்றும் சிசேரியனை தேர்வு செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் விளக்கினார். மேலும் பேசிய அவர், பசுவிடமிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யாவின் ஒவ்வொரு பாகமும் மனித குலத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது. பாருங்கள், பசுவின் சாணத்தை சாப்பிட்டால் நம் உடலும் மனமும் தூய்மையாகும். நமது ஆன்மா தூய்மையாகிறது. அது நம் உடலுக்குள் நுழைந்தவுடன், அது நம் உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலாகியதோடு, பசுவின் சாணம் சாப்பிடுவது குறித்த டாக்டர் மிட்டலின் அறிவுரை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலர் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட மக்களுக்கு பல மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வந்தனர். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்துவதால், Mucormycosis அல்லது Black fungus எனப்படும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.