வேரோடு சாய்ந்த நூறு வயது ஆலமரம்...மீண்டும் உயிர் கொடுத்த ஆட்சியர்!!

வேரோடு சாய்ந்த நூறு வயது ஆலமரம்...மீண்டும் உயிர் கொடுத்த ஆட்சியர்!!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசில்லா பகுதியில் நூறாண்டு பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்த நிலையில், அதனை வேறு இடத்தில் நட்டு புனர்வாழ்வு அளித்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஸ்ரீசில்லா பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேருடன் சாய்ந்தது. சரிந்து விழுந்த ஆலமரத்தை அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றி வந்தனர்.

இதனையறிந்த ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், வேரோடு சாய்ந்த மரத்தின் கிளைகளை வெட்டிவிட்டு, அதனை கிரேன் உதவியுடன் மாற்று இடத்தில் நட்டு புனர்வாழ்வு அளித்துள்ளனர். ஆலமரத்திற்கு புனர்வாழ்வு அளித்த ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.