பாசமாக நாயை அரவணைத்துக் கொண்ட பூனை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

பாசமாக நாயை அரவணைத்துக் கொண்ட பூனை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

சிறு வயதில் இருந்தே தன்னுடன் ஒன்றாக வளர்ந்த நாயை பாசமாக அரவணைத்து பார்த்துக்கொள்ளும் பூனையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காட்சிகளின்படி 14 வயதான நாய்க்குப்பின் பிறந்த 10 வயதான பூனை, முதல் நாளில் இருந்தே அதனுடன் ஒன்றாக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தன் பாதம் அருகே படுத்திருக்கும் நாயை, அன்போடு அரவணைத்திருக்கும் பூனையின் காட்சிகள் வெளியாகியுள்ளன. இணையத்தில் இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ள நிலையில், காண்போரை நெகிழ்ச்சிக் கொள்ள வைப்பதாக பலரும் கருத்திட்டு வருகின்றனர்.