உடல் முழுவதும் தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவன்..! எதற்காக தெரியுமா.?

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு தனது உடலில் சிறுவன் ஒருவன் தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

உடல் முழுவதும் தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவன்..! எதற்காக தெரியுமா.?

சுறுசுறுப்பிற்கு பெயர் பெற்ற தேனீக்கள் மகரந்த சேர்க்கையின் மூலம் விவசாயிகளுக்கும், தேன் சேகரிப்பின் மூலம் பொதுமக்களுக்கும் அரும்பணியாற்றி வருகிறது‌. இந்நிலையில் இயற்கையான முறையில் சேகரிக்கப்படும் தேனுக்கு அதிக தேவை உள்ளது.

இதை அறிந்துகொண்டு பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்து செட் பகுதியில் தனியார் தோட்டத்தில் தேனீக்கள் வளர்ப்பு பண்ணையை இசாக் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், உரிமையாளர் இசாக் என்பவரின் எட்டு வயது மகன் தனது தந்தைக்கு உதவியாக தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவா் உலக தேனிக்கள் தினத்தை முன்னிட்டு தேனிக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது உடல் முழுவதும் தேனிக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.