வர வர இந்த திருடர்களின் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை...!

மத்திய பிரதேசத்தில் கோவிலில் மனதார கடவுளை வணங்கி விட்டு உண்டியலை திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வர வர இந்த திருடர்களின் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை...!

பொதுவாக திருட்டு அல்லது திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதே தவறான செயல் தான். ஆனால், இங்கு திருட்டையும் பய பக்தியோடு, நேர்மையாக செய்திருகிறார் ஒருவர்.  பல திரைப்படங்களில்  கடவுளிடமே சென்று ஆழ்ந்த பரவசத்தில் வேண்டிக்கொண்டிருப்பார்கள்...நாம் நினைத்திருப்போம் அவர்களுக்கு ஏதோ பிரச்சனை போல அதனால் தான் இப்படி மனமுருகி வேண்டிக்கொண்டிருக்கிறார் என்று...பின்னர் தான் தெரியும், அங்கு இருக்கும் சாமி சிலையையோ அல்லது கோவில் சார்ந்த பொருட்களை திருடி செல்வதற்கு, தான் யாரிடமும் மாட்டாமல் இருக்க வேண்டும் என வேண்டி விட்டு அந்த கடவுளையே ஆட்டையை போட்டு செல்வது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம்.  

அது நிஜ வாழ்விலும் நடந்திருப்பது தான் தற்போது வைரலாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுகா கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், சட்டை அணியாமல் ஒரு நபர், கருவறைக்குள் நுழைந்து திருடுவதற்கு முன்பாக, அந்த கடவுளை பயபக்தியோடு வேண்டிகொண்டிருக்கிறார். பின்னர் முகத்தை மூடிக்கொண்டு அந்த கோவிலில் உள்ள உண்டியல் மற்றும் பிற பொருட்களை திருடி செல்கிறார். இந்த காட்சிகள் சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. மேலும் இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், வர வர இந்த திருடர்களின் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.     

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை அருகே மர்மநபர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட சுற்றித்திரிந்தபோது அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுத்து சென்றுள்ளனர். அந்த சிசிடிவி காட்சி சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.  

 

முன்பெல்லாம் திருட்டிற்கு பயந்த காலம் மாறி, வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் திருட்டிற்கு வெற்றி விழா கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்ற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது காலம்...!