மெட்ரோ ரயில் நிலையத்தின் உச்சியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் உச்சியில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மெட்ரோ ரயில் நிலையத்தின் உச்சியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மொட்டை மாடியில் ஏறிய இளம் பெண் ஒருவர் அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் அலறி சத்தம் போட தகவலறிந்து விரைந்து வந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதுடன், ஒரு வேளையில் பெண் குதித்து விட்டால் காப்பாற்றுவதற்காக துணியை விரித்து பிடித்து காத்திருந்தனர்.

ஆனால் வீரர்களில் சமாதான பேச்சுக்கு இணங்காத இளம்பெண் மொட்டை மாடியில் இருந்து குதிக்க, கீழே அப்பெண்ணை காப்பாற்றுவதற்காக காத்திருந்த வீரர்கள் துணியில் தாங்கி பிடித்த போதும் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.