சிறுவனின் திறமையை கண்டு வியந்த மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின்- வீடியோ வைரல்

சிறுவனின் திறமையை கண்டு வியந்த மாஸ்டர் ப்ளாஸ்டர்  சச்சின்- வீடியோ வைரல்

சிறுவனின் அசாத்திய சுழற் பந்து வீச்சை பார்த்து அசந்துபோன இந்திய கிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதனை தனது சமூகவலைதள பக்கத்திலும் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சிறுவன் வீசும் பந்து பேட்டிங் வீரருக்கு போக்கு காட்டி விட்டு, கால் இடுக்கில் பூந்து ஸ்டம்பை குறி வைத்து பதம் பார்க்கிறது.

சிறுவனின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பேட்டி வீரர்கள் திணறுகின்றனர். சிறுவனின் பந்துவீச்சில் அசந்துபோன சச்சின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துக் கொள்ள, அதனை பார்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரிட் லீ  சிறுவனின் பந்து வீச்சு திறமையை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.