பைக்கில் வித்தியாசமாக பயணித்த காதல் ஜோடி...போலீசாரால் அதிரடி கைது...!

பைக்கில் வித்தியாசமாக பயணித்த காதல் ஜோடி...போலீசாரால் அதிரடி கைது...!

ஆந்திராவில் கட்டிப்பிடித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

2கே கிட்ஸ்சின் அலப்பறைகள்:

சமீப காலமாகவே, 2கே கிட்ஸ் என்று சொல்லப்படும் தற்போதைய மாணவ, மாணவிகள் காதல் என்ற பெயரில் பண்ணும் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஜாலிக்காக என்னா வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவிற்கு அவர்களுடைய சிந்தனை முன்னேறிவிட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும். பேருந்து நிலையங்களில் வைத்து தாலி கட்டி அதை வீடியோவாக எடுத்து டிரெண்டாக்கி வருவது போன்ற தவறான செயல்களில் தற்போதைய மாணவ மாணவிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆபத்தை உணராத காதல் ஜோடிகள்:

அந்த வகையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்  பைக் ஓட்டும் தனது காதலனை முன்னாள் அமர்ந்து கட்டிப்பிடித்துக்கொண்டு சென்ற மாணவியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது. வாகனத்தில் இப்படி சென்றால் விபத்து ஏற்படும் என்ற ஆபத்தை கூட உணராமல் முன்னாள் அமர்ந்துக்கொண்டு பயணம் செய்யும் இந்த மாணவர்களின் வீடியோ தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். 

கைது செய்த போலீசார்:

பின்னர், இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த காதல் ஜோடி அஜய்குமார் - சைலஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரின் பெற்றோர்களையும் நேரில் வரவழைத்த போலீசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.