விலகிய தோள்பட்டயை அரங்கத்திலேயே சரி செய்த ரோஹித்; வைரலாகும் வீடியோ!

தனது தோள்பட்டை விலகிய நிலையில், விளையாட்டு அரங்கிலேயே, சரி செய்து கொண்ட ரோஹித் ஷர்மாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

விலகிய தோள்பட்டயை அரங்கத்திலேயே சரி செய்த ரோஹித்; வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அரங்கிலேயே தோள்பட்டை விலகியது அடுத்து, ரோஹித் ஷர்மா, தானாகவே சரி செய்து கொண்டு மீண்டும் விளையாடியது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீடியோ, கில்லி படத்தின் கிளைமேக்சில் விஜய் தனது விலகிய தோள்பட்டையை சரி செய்வதோடு இணைத்து, பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனால், ரோஹித் ஷர்மாவின் ஒரு வீடியோ மட்டும் படு வைரலானது. கிரிக்கெட் போட்டியின் போது, ரோஹித் ஷர்மாவின் இடது தோள்பட்டை விலகியது. அப்போது, அரங்கை விட்டு வெளியேறாமல், அங்கிருந்த படியே, விளையாட்டின் இடையில், அப்படியே தனது விலகிய தோள்பட்டையை சரி செய்து கொண்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.