ரைட்டு.. சைத்தான் சைக்கிள்ல வருது.. அதிபர் ஆவேசமாக பேச.. சூப்பர் மேன் உடையில் சிறுவன் சைக்கிளில் ரவுண்டடிக்க.. ஒரே கூத்து..!

டேய் நா அதிபர்டா.. ஒரு மரியாதை வேண்டாமா?

ரைட்டு.. சைத்தான் சைக்கிள்ல வருது.. அதிபர் ஆவேசமாக பேச.. சூப்பர் மேன் உடையில் சிறுவன் சைக்கிளில் ரவுண்டடிக்க.. ஒரே கூத்து..!

சூப்பர் மேன் சிறுவன்:

சிலி அதிபர் கேப்ரியல் போரிக் மேடையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க, ஒரு சிறுவன் சூப்பர் மேன் உடையில், சைக்கிளில் அவரை சுற்றி சுற்றி வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆவேசப் பேச்சு:

சிலி நாட்டில் கடந்த மார்ச் மாதம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 36-வயதான கேப்ரியல் போரிக். இவர் சிலி நாட்டில் புதிய அரசியலமைப்பை ஆதரித்து வாக்களிப்பு நடத்தினார். அப்போது புதிய அரசியலமைப்பு குறித்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார் கேப்ரியல். 

சைக்கிளில் வட்டமடித்த சிறுவன்:

அந்தநேரத்தில் எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன், சூப்பர் மேன் உடையணிந்து தனது சைக்கிளில் அதிபரை சுற்றி வட்டம் அடித்துக் கொண்டிருந்தான். சைக்கிளில் சுற்றி வந்த சிறுவன், சிறிது நேரம் அவர் முன்பு நின்று அவர் பேசுவதை கேட்டு விட்டு மீண்டும் தனது வேலையை அவன் தொடர்ந்தான். 

பின்னடைவு:

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில், பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அதிபர் கேப்ரியல் முன்மொழிந்த வாக்கெடுப்பில், 7.9 மில்லியன் மக்கள் புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு எதிராகவும் 4.9 மில்லியன் மக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். ஆகையால் இந்த வாக்கெடுப்பு கேப்ரியலுக்கு தோல்வியை அளித்தது. இது அவரது அரசியல் வாழ்க்கையில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.