மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் - ஹிஜாப் விவகாரம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

ஒற்றைச்சுவரை தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தின் நடக்கும் விவகாரம் தமிழ்நாட்டுகும் வந்து விடக் கூடாது என கமல்ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் - ஹிஜாப் விவகாரம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

கள்ளமில்லா மாணவர்களின் மத்தியில் மதவாத விஷச் சுவரை எழுப்பி வருவதாக  மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து உள்ளார். 

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் 6 பேரை வகுப்பிற்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டது தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வருவது இந்திய அரசியலமைப்பு எங்களுக்கு அளித்த உரிமை , அதனால் எங்களை கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். 

இந்த விவகாரம் பெரும் கலவரத்தை உண்டு படுத்தி வரும் நிலையில்,  கல்லூரி மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என கூறி கோஷமிட்டு வருகின்றனர்.