தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பழங்குடி மக்களுடன் இணைந்து நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
பரத் ஜோடோ யாத்ரா:
இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த மாதம் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தொடங்கிய ”பாரத் ஜோடோ யாத்ரா” நடைப்பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகாவை கடந்து தெலுங்கானா மாநிலத்தில் தற்போது மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
ராகுலின் நடன வீடியோ வைரல்:
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் தர்மபூர் பகுதியில் நடைப்பயணத்திற்கு இடையே பழங்குடி மக்களுடன் இணைந்து ’கொம் கொயா ‘ என்ற நடனத்தை ராகுல் காந்தி ஆடினார். அப்போது பழங்குடி மக்களின் பாரம்பரிய தலைப் பாகையை அணிந்து கொண்டு நடனம் ஆடிய ராகுலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.