கண் சிமிட்ட, சிரிக்க முடியவில்லை... பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்..!சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

கண் சிமிட்ட, சிரிக்க முடியவில்லை... பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்..!சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் Ramsay Hunt Syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முகத்தில் உள்ள நரம்புகளை தாக்கும் Ramsay Hunt Syndrome நோய் முகத்தில் பக்கவாதத்தையும், செவித்திறன் இழப்பையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதுத்தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், தன்னால் தனது வலதுபக்க கண்ணை சிமிட்ட முடியவில்லை, சிரிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார். இதை சரிசெய்ய பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில்  டொராண்டோவில் நடைபெற இருந்த ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.