குடிபோதையில் பேருந்தில் ரகளை செய்த போலீஸ்...பயணியை தாக்கியதால் பரபரப்பு...இணையத்தில் வீடியோ வைரல்....!

ஓடும் பேருந்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபடும் காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குடிபோதையில் பேருந்தில் ரகளை செய்த போலீஸ்...பயணியை தாக்கியதால் பரபரப்பு...இணையத்தில் வீடியோ வைரல்....!
Published on
Updated on
1 min read

சென்னை, வண்டலூர் முதல் கோயம்பேடு வரை செல்லக்கூடிய மாநகர பேருந்தில் காவலர் ஒருவர் குடிபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் குடிபோதையில் காவலர் ஒருவர், பயணியிடம் தகராறில் ஈடுபட்டு அடிக்க முற்படுகிறார். உடனடியாக பயணிகள் அனைவரும் அந்த நபரை கீழே இறக்கிவிடுமாறு நடத்துனரிடம் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த நபரை நடத்துனர் உட்காறு கூறுயுள்ளார். ஆனால் குடிபோதை காவல்ரோ போதையில் நடத்துனரையும் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக நுண்ணறிவு பிரிவு போலீசார் சம்பவம் நடந்த இடம் குறித்தும், உண்மையிலேயே போதையில் இருந்த நபர் காவலரா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உறுதியானால் அந்த நபர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com