கொள்ளையடிக்க சென்று ”ஜன்னலில்” மாட்டிக்கொண்டு தூங்கிய திருடன்..! போலீசார் மீட்ட வினோத நிகழ்வு!!

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் ஜன்னலில் மாட்டிக்கொண்ட திருடனை போலீசார் மீட்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

கொள்ளையடிக்க சென்று ”ஜன்னலில்” மாட்டிக்கொண்டு தூங்கிய திருடன்..! போலீசார் மீட்ட வினோத நிகழ்வு!!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் ஜாடுபுடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில் தான் எல்லையம்மன். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் வெகுவிமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.

இதனை நோட்டமிட்டு இருந்த திருடன் ஒருவன்,  நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்து கோவிலின் ஜன்னல் கம்பிகளையெல்லாம் நீக்கிவிட்டு கோவிலுக்குள் சென்று உள்ளார். பின்னர், கருவறையில் இருந்த அம்மனின் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே வர முயற்சித்து உள்ளார்.  ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் வெளியே வர போராடியதில் சோர்வடைந்து அப்படியே தூங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றபோது, ஜன்னலில் சிக்கி இருந்த திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜன்னலில் சிக்கியிருந்த கொள்ளையனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க  முடியவில்லை. 
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை மீட்டு, உடனடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.