கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை - உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை - உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி, தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அங்கு பணியாற்றிய சக மருத்துவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு 6 மாதத்தில் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டில், சவுந்தர்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல், பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.