நடுவானில் ஏர்இந்தியா அதிகாரியை அறைந்த பயணி...தரையிறங்கியதும் நடந்தது என்ன?

நடுவானில் ஏர்இந்தியா அதிகாரியை அறைந்த பயணி...தரையிறங்கியதும் நடந்தது என்ன?

சிட்னியில் இருந்து டெல்லி வந்தடைந்த விமானத்தில் ஏர்இந்தியா அதிகாரியை பயணி ஒருவர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் இருக்கையை மாற்றிக் கொள்வதில் இரு பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றவே, அதனை கட்டுப்படுத்த ஊழியர்கள் முயற்சித்தனர்.

இதையும் படிக்க : சில வாரங்களாகவே வெளுத்து வாங்கிய கனமழை... சேதமடைந்த நெற்பயிர்கள்...கவலையில் விவசாயிகள்!

இருப்பினும், அவர்களின் முயற்சி பலனளிக்காததால், மூத்த அதிகாரி ஒருவர் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் மூத்த அதிகாரியை அறைந்ததோடு மட்டுமல்லாமல், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து விமானம் தரையிறங்கியதும், இருக்கைக்காக சண்டையிட்டு கொண்டதற்காகவும், சமாதானம் செய்த அதிகாரியை அறைந்ததற்காகவும் அந்த பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.