காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல்...2022 - 23 ல் மத்திய அரசு திட்டவட்டம் !!

மத்திய நிதிநிலை அறிக்கை 2022 - 23ல் பிப்ரவரி மாதம், காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல்...2022 - 23 ல் மத்திய அரசு திட்டவட்டம் !!

காகிதமில்லா முறையை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது தொடர்ந்து இதற்கான செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று காகிதமில்லா முறையில் பெட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் கைப்பேசி செயலில் பட்ஜெட் உரை மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள் , நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனங்களின் படி முழுமையாக பார்வையிடலாம் என தெரிவித்துள்ளது.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இருமொழிகளிலும் இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.