கால் இல்லாத யானையை நடக்க வைத்த பாகன்..! நெகிழ்ச்சி தருணம்... எப்படி தெரியுமா..?

யானைக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் பாகனின் செயல் இணையம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது.

கால் இல்லாத யானையை நடக்க வைத்த பாகன்..! நெகிழ்ச்சி தருணம்... எப்படி தெரியுமா..?

கால் இல்லாமல் நடக்க கஷ்டப்படும் யானை ஒன்றுக்கு அதனுடைய பாகன் செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் நெகிழ்ச்சியான தருணம் இணையத்தில் படு வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்த வீடியோ காட்சி டுவிட்டரில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று ஒரு கால் இல்லாமல் 3 கால்களுடன் நின்றுக்கொண்டிருக்கிறது. அப்போது யானைப்பாகன் அந்த யானைக்கு அருகில் சென்று பாதிக்கப்பட்ட யானையின் காலில் ஷாக்ஸ் போன்ற ஒன்றை மாற்றிவிடுகிறார். பின்னர் அதன்மேல் நடக்க உதவும் இரும்பு ஸ்டாண்ட் போன்ற ஒன்றை யானையின் காலில் மாட்டிவிடுகிறார்.

பின்னர் அந்த யானை பாகனுக்கு பின்னால் பொருத்தப்பட்ட செயற்கை காலுடன் மெதுவாக நடந்து செல்கிறது. இரும்புக்காலுடன் அடியெடுத்து வைத்து நடக்கும் அந்த யானையின் நெகிழ்ச்சியான தருணம் இணையத்தில் பார்போரின் மனதை கலங்க வைத்து பாகனுக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது.