பிரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் நாட்களை 28 ல் இருந்து 30 ஆக உயர்த்த உத்தரவு!!

பிரீபெய்டு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

பிரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் நாட்களை 28 ல் இருந்து 30 ஆக உயர்த்த உத்தரவு!!

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால திட்டமாக வழங்கப்படும் சலுகை 28 நாட்களாக இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 30 நாள் திட்டம் ஒன்றை கட்டயாம் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

அதன்படி திட்ட சலுகையானது  சிறப்பு சலுகை மற்றும் காம்போ சலுகை  ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக மாற்றி அமைக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டது தொடர்ந்து இதன் மூலம் ஆண்டுக்கு மேற்கொள்ளப்படும் பிரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும் என கூறுகின்றனர்.