தன்னம்பிக்கை மட்டும் போதும்.. உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்..!

ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ? உடம்பில் உள்ள குறைகள்எல்லாம் ஊனம் இல்லீங்கோ..!

தன்னம்பிக்கை மட்டும் போதும்.. உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்..!

தன்னம்பிக்கை போதும்:

இன்று எனக்கு உடம்பு சரியில்லை லீவு வேண்டும் என நாள்தோறும் பணிக்கு செல்ல விருப்பமில்லாமல் எப்படியெல்லாம் விடுமுறை எடுக்கலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், எனக்கு உடல் தான் ஊனமே தவிர மனம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இந்தப் பெண்மணி. 

எதுவும் முடியும்:

நீ பெண், ஆண் என்பது இங்கு முக்கியமல்ல. திடகாத்திரமானவர், ஊனமுற்றவர் என்பது முக்கியமல்ல. தைரியமும், நம்பிக்கையும் இருந்தால் போதும் யாரு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யலாம். இன்று சாலையில் செல்லும் சாதாரண வாகனங்களை காட்டிலும், ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தான் இருசக்கர வாகனத்தில் உணவுகளை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் செல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

மாற்றுத்திறனாளி பெண்:

இந்த ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம். இந்த நிறுவனங்களில் பெண்களையும் ஆங்காங்கே நாம் பார்க்க முடியும். ஆனால் இப்படி ஒரு பெண்ணை யாராலும் பார்த்திருக்க முடியாது. டெல்லியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். 

வீடியோ வைரல்:

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

बेशक मुश्किल है ज़िन्दगी... हमने कौनसा हार मानना सीखा है! सलाम है इस जज्बे को ♥️ pic.twitter.com/q4Na3mZsFA

— Swati Maliwal (@SwatiJaiHind) September 10, 2022