ஒடிசா: இறந்த வளர்ப்பு பிராணிக்கு மனிதர்களை போன்று இறுதி சடங்கு நடத்திய உரிமையாளர்கள்..!

துக்கம் அனுசரித்த குடும்பத்தினர் தங்கள் வழக்கப்படி நாய்க்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்..!

ஒடிசா: இறந்த வளர்ப்பு பிராணிக்கு மனிதர்களை போன்று இறுதி சடங்கு நடத்திய உரிமையாளர்கள்..!

ஒடிசாவில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்த வளர்ப்பு நாய்க்கு குடும்பத்தினர் பாரம்பரிய  முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. ஒடிசாவின் பாரலக்கேமுண்டியை சேர்ந்தவர் துன்னு கவுடா. இவர் அஞ்சலி என பெயரிடப்பட்ட நாயை கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் குடும்பத்தினருடன் பாசமாகவும், விசுவாசமாகவும் இருந்து வந்த அஞ்சலி, நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. இதையடுத்து குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தது போல், துக்கம் அனுசரித்த குடும்பத்தினர் தங்கள் வழக்கப்படி நாய்க்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Odisha: A family in Paralakhemundi bid a tearful goodbye to their pet dog, Anjali, &amp; performed its last rites as per traditional rituals yesterday when it died after being with them for 17 yrs. Owner of the dog, Tunnu Gouda also took out a funeral procession for his pet. <a href="https://t.co/CQwIW9PFmv">pic.twitter.com/CQwIW9PFmv</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1556841647501357056?ref_src=twsrc%5Etfw">August 9, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>