சிறுவனுக்கு தனது டென்னிஸ் பேட்டை கொடுத்த ஜோகோவிச்….. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிறுவனின் வீடியோ வைரல்

சிறுவன் ஒருவனுக்கு ஜோகோவிச் தனது டென்னிஸ் பேட்டை கொடுத்த போது அவர் துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச். அடுத்த மூன்று செட்களை 6 - 3, 6 - 2, 6 - 4 என கைபற்றி ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவர் வென்றுள்ள 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இது பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிப் பெற்ற ஜோகோவிச், தான் மைதானத்தில் இருந்து செல்லும் முன்பு கேலரியில் இருக்கும் சிறுவனை பார்த்தார். அந்தச் சிறுவன் ஜோகோவிச்சின் தீவிர ரசிகன். கேலரியின் அருகே சென்ற ஜோகோவிச் அவர் விளையாடிய டென்னிஸ் ராக்கெட்டை அந்தச் சிறுவனக்கு பரிசலித்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்தச் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/WUTangKids/status/1404147388739207173