'மாதத்திற்கு ஒரு பிட்சா மட்டும் தான்' வித்தியாசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புதுமண தம்பதி - வீடியோ வைரல்

அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் மணக்கோலத்தில் 'மாதத்திற்கு ஒரு பிட்சா மட்டும் தான்' போன்ற பல வித்தியாசமான நிபந்தனைகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி, வைரலாகி வருகிறது.

'மாதத்திற்கு ஒரு பிட்சா மட்டும் தான்' வித்தியாசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புதுமண தம்பதி - வீடியோ வைரல்

திருமணம் என்பது ஓவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான பயணப்பாதை மற்றும் ஒரு புதிய தொடக்கம் ஆகும். அப்படி அந்த திருமணத்திற்காக, ஒவ்வொருவரும்,அலங்காரம் முதல் உணவு வரை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருவர். இன்றைய நாட்களில் திருமணமாகப்போகும் ஜோடிகள் தங்களது நாளை சிறப்பாக்க நடனம், டிஜே போன்றவற்றை  மேற்கொண்டு, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர் . இன்னும் சிலர் அதிலிருந்து மாறுபட்டு தங்களை வித்தியாசமாக காட்ட பல புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு ஜோடி பல புதிய விநோதமான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷாந்தி மற்றும் மெஃபில் என்ற புதுமண ஜோடி தங்களின் திருமண மேடையில், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், புதிய நிபந்தனைகள் எழுதப்பட்ட ஒரு பதாகையில், புதுமண ஜோடிகள்  கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில், ' மாதத்திற்கு ஒரு பிட்சா மட்டும் தான் ' என முதலில் எழுதப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து, 'மணமகள் புடவை தான் தினமும் அணிய வேண்டும்', 'தினமும் உடற்பயிற்சி கூடம் செல்ல வேண்டும்' போன்ற நிபந்தனைகள் கொண்டிருந்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தில் சாட்சி கையெழுத்தும் பலர் போட்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.