விண்வெளியில் பட்டொளி வீசி பறந்த தேசியக் கொடி..ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அசத்தல்..!

நாசா விண்வெளி தளத்திலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது..!

விண்வெளியில் பட்டொளி வீசி பறந்த தேசியக் கொடி..ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அசத்தல்..!

75-வது ஆண்டு சுதந்திர தினம்: நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த வருடமும் இல்லாத வகையில் டைமன் ஜூப்ளியாக இந்த வருடம் தொடங்கியது முதலே சுதந்திர தினம் பல்வேறு வகையில் கொண்டாட்டப்பட்டு வந்தது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி, மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அதன் படி நாட்டில் பல்வேறு இடங்களிலும் மக்கள் தங்களது வீடு, வாகனம் போன்றவற்றில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர். 

விண்வெளியில் சுதந்திர தினம்: திருமணங்கள் மட்டும் தான் பல விதமான இடங்களில் நடக்குமா என்ன? சுதந்திர தினத்தைக் கூட அப்படி கொண்டாடலாம் என நிரூபித்துக் காட்டியிருக்கிறது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு. பூமியை தாண்டி விண்வெளியில் தேசியக் கொடியை பறக்கவிட்டு தங்களது தேசப்பற்றை பறைசாட்டியுள்ளனர் இந்த அமைப்பினர். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி வரும், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு, பூமிக்கு வெளியே 30 கிலோ மீட்டர் உயரத்தில், செயற்கைக்கோளில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டுள்ளது. இதேபோல் நாசா விண்வெளி தளத்திலும் தேசியக்கொடி பறக்கவிடப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.