பணியாளரை வைத்து காலணியை போட வைத்த நகராட்சி கமிஷனர்... சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ...

காந்தியடிகளின் பிறந்த நாளில்  தனது பணியாளரை வைத்துகாலணியை போட வைத்த நகராட்சி கமிஷனர் - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

பணியாளரை வைத்து காலணியை போட வைத்த நகராட்சி கமிஷனர்... சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ...

மகாத்மா காந்திஜியின் 153 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகாரிகள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து  ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர்  காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக  ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் (பொமாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நகராட்சி ஆணையாளர்  ( பொ) நிலேஷ்வர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகிறோர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதற்கு முன்னதாக நகராட்சி கமிஷனர் பொறுப்பு நிலேஷ்வர் தனது அலுவலக உதவியாளர் வைத்து தனது காலனியை அணிவிக்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது காந்தி பிறந்த நாளன்று தொழிலாளியை வைத்து செருப்பை மாட்டிவிடும்  வீடியோ சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.