WhiteHat  ஜூனியர் நிறுவனத்தில் அடுத்தடுத்து வேலையை ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள்! ஏன் தெரியுமா?

நேரடி பணி முறைக்கு அழைத்ததால் 800க்கும் மேற்பட்ட WhiteHat  ஜூனியர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

WhiteHat  ஜூனியர் நிறுவனத்தில் அடுத்தடுத்து வேலையை ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள்! ஏன் தெரியுமா?

கொரோனா நெருக்கடி காலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த work from Home என்னும் வீட்டில் இருந்தே பணி செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படது. இதனால் பணியாளர்கள் அவரவர் வீட்டில் இருந்தே பணி செய்ய தொடங்கினர்.

இந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து சர்வதேச அளவில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் பல நிறுவனங்கள் work from Home முறையை ரத்து செய்து நேரடி பணி முறைக்கு ஊழியர்களை அழைத்து வருகின்றனர்.

அதன்படி நேரடி பணி முறைக்கு அழைத்ததால் கடந்த இரு மாத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட WhiteHat  ஜூனியர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. work from Home முறைக்கு பழகிபோன ஊழியர்கள் நேரடி பணி முறையை விரும்பாததால் சமீபகாலமாக ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்து காணப்படுவது குறிப்பிடதக்கது.