வளர்ந்து வந்த நாட்டை எப்படி அழிக்கலாம் என்பதற்கு உதாரணம் மோடியின் ஆட்சி - ராகுல்காந்தி!

வளர்ந்து வந்த நாட்டை எப்படி அழிக்கலாம் என்பதற்கு உதாரணம் மோடியின் ஆட்சி - ராகுல்காந்தி!

பொருளாதாரத்தில் உலகிலேயே வேகமாக வளர்ந்து வந்த நாட்டை எப்படி சீரழிக்கலாம் என பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி பாடம் புகட்டியுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி  பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பணவீக்கம், வேலை நெருக்கடிகளுக்கு நடுவே நாடு உழன்று கொண்டிருப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.