மிஸ் யூ அப்பா... நடிகை குஷ்பு உருக்கம்!

மிஸ் யூ அப்பா... நடிகை குஷ்பு உருக்கம்!

கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நினைக்காத நாளில்லை என நடிகை குஷ்பு உருக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தைல் பதிவிட்டுள்ளார். 

கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதையொட்டி, அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சமூகவலைதளங்கள் வழியாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை குஷ்பூ, கலைஞர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் நான் வெற்றிடத்தை உணராத ஒருநாள் கூட இல்லை. ஒரு குரு என்பவர் கடவுளுக்கு மேலே. நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழிந்துகொன்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா" என பதிவிட்டுள்ளார்.