’போலீஸ் என்ன தொட்டா நான் இங்கே குத்திட்டு செத்துடுவ’: ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்கனுமா" கைதுக்கு கதறிய மீரா மிதுன்!!

’போலீஸ் என்ன தொட்டா நான்  இங்கே குத்திட்டு செத்துடுவ’: ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்கனுமா" கைதுக்கு கதறிய மீரா மிதுன்!!

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல புகார்கள்   அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையின்போது, ' அதிகாரிகள் டார்ச்சர் செய்தாக' குறிப்பிட்டுள்ள அவர், 'ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடக்கவேண்டுமா. என்று கதறலுடன் வீடியோ ஒன்றை பதிவு செய்தும் வெளியிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=S7KShUxcodE