ஜன்னல் வழியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்.. வைரல் வீடியோ

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பிய ஒருவர், குறுக்கு வழியில், ஆபத்தான முறையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஜன்னல் வழியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்.. வைரல் வீடியோ

கொரோனா சூழலுக்கு இடையே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பலரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.

அந்தவகையில் அண்மையில் தடுப்பூசிக்காக பலர் நீண்ட வரிசையில் பலர் நீண்ட வரிசையில் காத்திருப்பதை கண்டும், அதை  விரும்பாத அந்த நபர், குறுக்கு வழியில்,  தடுப்பூசி மையத்தின் பக்கவாட்டு ஜன்னல் அருகே சென்று, தடுப்பூசியை போட்டுள்ளார்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. இந்தநிலையில் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது தவறான முன்மாதிரி என்றும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் விமர்சித்துள்ளனர்.