கேக் சாப்பிட்டு பிறந்தநாள் கொண்டாடிய சிம்பா...இணையத்தில் வைரலாகும் வீடியோ...

இறைச்சியால் ஆன கேக்கை சாப்பிட்ட சிம்பா...

கேக் சாப்பிட்டு பிறந்தநாள் கொண்டாடிய சிம்பா...இணையத்தில் வைரலாகும் வீடியோ...

பிரேசிலில் ஆண் சிங்கம் ஒன்று கேக் சாப்பிட்டு பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் உள்ள பையோபார்க் டோ ரியோ என்ற விலங்கியல் பூங்காவில், சிம்பா என்ற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சிங்கத்தின் 13-வது பிறந்த நாளை கொண்டாட முடிவெடுத்த பூங்காவின் உரிமையாளர், அதற்கு இறைச்சியால் செய்யப்பட்ட கேக்கை  பரிசாக அளித்துள்ளனர். அதனை சுவைத்து, ரசித்து சிம்பா சாப்பிட்டது.  

அப்போது, பூங்காவிற்கு சென்றிருந்த குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்கள், பிறந்த நாள் கொண்டாடும் சிம்பாவை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்தபடி, செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும், ஆண் சிங்கம் ஒன்று கேக் சாப்பிட்டு பிறந்த நாள் கொண்டாடியது தற்போது வைரலாகி வருகிறது.