மஹிந்திரா இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய ஜெனரேஷன் கார் என்ன தெரியுமா..?

மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய ஜெனரேஷன் மஹிந்திரா ஸ்கார்பியோ N காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய ஜெனரேஷன் கார் என்ன தெரியுமா..?

இந்தியாவில் தற்போது SUV கார்களின் சந்தை உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் தற்போது 50% கார் சந்தையை SUV கார்கள் வைத்துள்ளன. இந்த SUV கார் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்றால் அது மஹிந்திரா நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் தற்போது பலரால் வாங்கப்படுகிறது.

இந்த நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு வெளியான XUV 700 கார் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கார்களில் பல மேம்பாடுகளை செய்துவரும் மஹிந்திரா நிறுவனம் தற்போது புதிய மேம்பட்ட வசதிகளுடன் கூடிய நியூ ஜென் மஹிந்திரா ஸ்கார்பியோ N காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் இந்தியாவில் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.