மாஹாராஷ்டிரா - கடந்த ஆண்டில் 29 ஆயிரம் சாலை விபத்துகள் பதிவாகி இருப்பதாக தகவல்!!

மாஹாராஷ்டிரா  - கடந்த ஆண்டில் 29 ஆயிரம் சாலை விபத்துகள் பதிவாகி இருப்பதாக தகவல்!!

மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு 29 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்து இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக விபத்து நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக மஹாராஷ்டிரா உள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டு 29 ஆயிரத்து 971 விபத்துகள் நடந்து உள்ளன. இந்த விபத்துகளில் 13 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்து உள்ளனர். 22 ஆயிரத்து 878 பேர் காயமடைந்து உள்ளனர். 2020-ம் ஆண்டு 24 ஆயிரத்து 971 விபத்துகள் நடந்து உள்ளன.