ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் கூட்டத்திற்குள் புகுந்த லாரி - பதைபதைக்கும் வீடியோ வைரல்!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் கூட்டத்திற்குள் புகுந்த லாரி - பதைபதைக்கும் வீடியோ வைரல்!

டெல்லியில் தண்ணீர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கூட்டத்திற்குள் புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள கான் சப்ஜி ஒரு சந்தை பகுதியாகும். எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் நேற்று தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கூட்டத்திற்குள் புகுந்தது.

இதில் 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் சாலையோர கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் நொறுங்கி சிதறின. இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.