நடிகை சமந்தாவில் லெவல் அப் சேலஞ்ச் வீடியோ வைரல்

நடிகை சமந்தா பதிவிட்டுள்ள லெவல் அப் சேலஞ்ச் வீடியோ இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. 

நடிகை சமந்தாவில் லெவல் அப் சேலஞ்ச் வீடியோ வைரல்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியுள்ளார்.

சினிமாவில் படுபிசியாக நடித்து வரும், சமந்தா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

அந்த வரிசையில் இன்று ஒர்க்அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சமந்தா 2022 ம் ஆண்டை கிக் ஸ்டார்ட் செய்யுங்கள். எந்த கருவியும் இல்லாமல் இந்த level up சேலஞ்சை செய்யுங்கள். 

எனது டிரைனர் எனக்கு சேலஞ்ச் செய்தார். இப்போது நான் உங்களுக்கு சேலஞ்ச் செய்கிறேன். லெவல் அப் சேலஞ்சை செய்யுங்கள் என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமந்தா பதிவிட்ட இந்த வீடியோவிற்கு லைக்குகள் எக்கசக்கமாக குவிந்து வருகிறது. சமந்தாவின் இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.