காரின் அடியில் சிக்கிய சிறுத்தை.. பாதாள சாலைகள் அமைக்க வேண்டும் - விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை

காரின் அடியில் சிக்கிய சிறுத்தை.. பாதாள சாலைகள் அமைக்க வேண்டும் - விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை

சிறுத்தை மீது கார் மோதிய விபத்தில், காரின் அடியில் சிக்கிய சிறுத்தை காயங்களுடன் தப்பிச் சென்றது.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, சிறுத்தையின் மீது மோதியது. இதில், காரின் அடியில் சிறுத்தை சிக்கிகொண்டதையடுத்து, ஓட்டுநர் காரை பின்நோக்கி இயக்கினார். அப்போது விடுப்பட்ட சிறுத்தை காயங்களுடன் அங்கிறுத்து தப்பிச் சென்றது.

இந்த வீடியோ விலங்குகள் நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வனவிலங்குகளை பாதுகாக்க, நெடுஞ்சாலைகளில் பாதாள சாலைகள் அமைக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.