கர்நாடகாவில் ஹிஜாப் அணிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் - இன்று தீர்ப்பு!!

ஹிஜாப் குறித்து தொடர்ந்து வரும் போராட்டங்களால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளுக்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய  மாணவிகள் தொடர்ந்த வழக்கில் - இன்று தீர்ப்பு!!

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்க கூடாது என மாவட்டம் வாரியாக முஸ்லீம் மதத்தை சார்ந்த பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் தொடங்கிய போராட்டமானது தற்போது மாநிலங்கள் முழுவதும் பரவிய நிலையில் பரபரப்பு நிலவி வருகிறது. சிக்கமகளூருவில் ஐ.டி.எஸ்.டி. பி.யூ கல்லூரியில் ஹிஜாப் (பர்தா) காவி துண்டு அணிந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதேபோன்று சிவமொக்கா, பாகல்கோட்டை, பீதர், பெலகாவி, விஜயாப்புரா, ஹாசன், மண்டியா, தாவணகெரே, தார்வார், பீதர் உள்பட 10 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பி.யூ. கல்லூரி மாணவர்கள், பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் கல்லூரி நிர்வாகமானது தடை விதித்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள்  கல்லூரி வளாகம் மற்றும் நுழைவுவாயிலின் முன்பே நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தொடர்ந்து இந்து மாணவர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டுள்ளனர், இதனால் பரபரப்பு நிலவியாதாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்து அனைவரையும் வெளியேற்றியுள்ளது. இதையடுத்து அசாம்பாவிதங்களை தடுப்பதற்காக கல்லூரிகள் முன்பு காவல் அதிகாரிகள் குவிந்த வண்ணம் இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விஜயாபுரா மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வந்துள்ளனர் இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள் அவர்களிடம் மாநில அரசின் உத்தரவை குறிப்பிட்டு, சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கூறினர். ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை. பர்தா மற்றும் காவி துண்டுடன்தான் அணிந்து வருவோம் என்றனர். இதனால் கல்லூரி நிர்வாகமானது அவர்களுக்கு காலவரையற்ற விடுமுறையை அளித்துள்ளது. 

இதனை தொடர்ந்து பெலகாவி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து வருவது எங்கள் உரிமையாகும் இதை யாரும் தடுக்க கூடாது என பாரதிய ஜனதா அரசு உத்தரவு பிறப்பித்ததை திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டு இருந்துள்ளனர்.  இதேபோல ஹாசன், பீதர், சிவமெக்கா ஆகிய இடங்களிலும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மாநில அரசு எங்கள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. முஸ்லிம் மாணவர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. மாநில அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் அதற்கான முஸ்லீம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் யாருக்கு சாதகமாக அமையும் என அனைவரிடத்திலும் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு கல்லூரிகளுக்கும் மற்ற பொது இடங்களிலும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.