விஜய்யின் மடியில் இருப்பது இந்த நடிகையின் மகனா..? வைரல் புகைப்படம்

வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரி, நடிகர் விஜய்யின் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் மடியில் இருப்பது இந்த நடிகையின் மகனா..? வைரல் புகைப்படம்

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். 

தமிழகத்தைப் பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என்றே கூறலாம்.

மாஸ்டருக்குப் பிறகு. தளபதியின் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் இந்த லாக்டவுண் நேரத்தில் விஜயின் பழைய புகைப்படங்கள், நினைவுகளை அவரது ரசிகர்கள் வெளியிட்டுவருகின்றனர். 

அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது தளபதி விஜய், மடியில் ஒரு குழந்தையை தூக்கிவைத்திருப்பதை போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. நம்ம பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி

.

சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதா வீட்டில் விசேசம் ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன் மனைவி சங்கீதாவுடன் போயிருந்தார் தளபதி விஜய். அப்போது, எடுத்த இந்த புகைப்படமே இப்போது வைரலாகி வருகிறது. தற்போது வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி, தாயுடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.