காரில் இருந்தபடியே விளையாடும் இணையதள விளையாட்டு நிலையம்!! படையெடுக்கும் மக்கள்

காரில் இருந்தபடியே விளையாடும் இணையதள விளையாட்டு நிலையம்!! படையெடுக்கும் மக்கள்

எகிப்து நாட்டில், காரில் இருந்தபடியே இணையதள விளையாட்டுகளில் ஈடுபடும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று விளையாட்டு நிலையத்தை திறந்துள்ளது.

இங்கு காரில் வந்து, அதில் அமர்ந்தபடியே எதிரே இருக்கும் பெரிய திரையில் இணைய விளையாட்டுகளை விளையாடலாம்.

பொதுவாக இணைய விளையாட்டு நிலையங்களில் சிகரெட் புகை, நெரிசல் என பல சங்கடங்கள் உள்ளன. அதனைத் தவிர்த்து குடும்பத்துடன் வந்து விளையாடும் வகையில், இதனை உருவாக்கி உள்ளதாக  இதன் நிறுவனர் அகமத் சலீம் தெரிவித்துள்ளார்.

காரில் வாருங்கள், அதிலேயே அமர்ந்து விளையாடுங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், வீட்டிற்கு திரும்புங்கள் என்றே அவர் விளம்பரப்படுத்தியுள்ளார். அதற்கு ஏற்றார்போல் பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் சென்று விளையாட கார்களில் வரிசையாக காத்திருக்கின்றனர்.