சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி தேர்வு

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர்-கவாஸ்கர் தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி தேர்வு

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர்-கவாஸ்கர் தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதன்படி, 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அவற்றில் இருந்து 2020-21ஆம் ஆண்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர்-கவாஸ்கர் போட்டி, 1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் தொடர் ஆகியவை முன்னிலையில் இருந்தன. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், சிறந்த டெஸ்ட் தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது.