தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா!! - மகளுக்காக தந்தையும்...வைரல் புகைப்படம்!

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான அன்பின் பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதற்கேற்றவாறு உள்ளது இந்த நிகழ்வு.

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா!! - மகளுக்காக தந்தையும்...வைரல் புகைப்படம்!

ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் அப்பா தான் முதல் ஹீரோ. ஒவ்வொரு தந்தை தங்களின் மகளுக்கு எப்படி வாழ வேண்டுமென்பதை கற்றுக் கொடுப்பதை விட... அவர்கள் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதிலிருந்து வாழ்க்கை பாடத்தை கற்று  கொடுக்கிறார்கள். அதாவது தந்தையின் இடத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாது.  மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்ற முத்துகுமாரின் வரிகளுக்கேற்ப இப்படிப்பட்ட பந்தத்தின் அன்பை விவரிக்கும் விதமாக புகைப்படம் ஒன்று நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

வைராலாகி வரும் புகைப்படத்தில் தந்தையும் மகளும் தலையை முட்டியபடி உட்கார்ந்து உள்ளனர்.அதில் இருவரது தலையிலும் முன் பக்கத்தில் மட்டும் ஷேவ் செய்யப்பட்டுள்ளது. மூளையில் அறுவை சிகிச்சை செய்து தனது மகளை போலவே தனது தலையையும் ஷேவ் செய்து கொண்டார் அந்த பாசக்கார தந்தை. அவரது தலையில் தனது மகளுக்கு அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல்கள் போலவே இந்த தந்தையானவர் தலையில் வரைந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவதன் மூலம் இந்த செய்தியானது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வு  பற்றிய விவரங்கள் பற்றி எதுவும் அறியப்படவில்லை என சொல்லப்படுகிறது.