வித்தியாசமாக கரப்பான் பூச்சிகளுடன் காதலர் தினம் கொண்டாடிய இளைஞர்! வெளி நாடுகளில் களைகட்டிய காதலர் தினம்!

வித்தியாசமாக கரப்பான் பூச்சிகளுடன் காதலர் தினம் கொண்டாடிய இளைஞர்! வெளி நாடுகளில் களைகட்டிய காதலர் தினம்!

உலகின் பல்வேறு பகுதிகளிலும், இன்று காதலர் தினம் உற்சாகமாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள் இன்று காதலர் தினத்தையொட்டி, கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கொலம்பியாவில் வழக்கம்போல் ரோஜாப்பூக்களின் விற்பனை களை கட்டியுள்ளது. 

அதேபோல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இதய வடிவிலான சாக்லெட் மற்றும் கேக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில், நள்ளிரவு நேரத்தில் இதய வடிவிலான படகில், காதல் ஜோடிகள் ஹாயாக வலம் வந்து, காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.  

அதேபோல் லண்டனில் உள்ள வன உயிரியில் பூங்காவில் உள்ள ஆர்யா மற்றும் பானு என்ற இரண்டு ஆசியச் சிங்கங்களும் காதலர் தினம் கொண்டாடியுள்ளன. 

மேலும், ஜோடியில்லாமல் காதலர் தினத்தை வெறுக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், மடகாஸ்கரில் இளைஞர் ஒருவர் கரப்பான் பூச்சிகளுடன் காதலர் தினம் கொண்டாடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல், பிரான்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் இதய வடிவத்திலான சிப்பிகளே உணவாக பரிமாறப்படுகிறது. காதலர்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.