நான் வெற்றி பெற்றால் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் - சுயேட்சை வேட்பாளர் பாலசுப்பிரமணி தீவிர வாக்கு சேகரிப்பு!!

நான்  வெற்றி பெற்றால் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் -  சுயேட்சை வேட்பாளர் பாலசுப்பிரமணி தீவிர வாக்கு சேகரிப்பு!!

சென்னை மாநகராட்சியின் 32-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பாலசுப்ரமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் 32-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பால சுப்பிரமணி, வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மேஜை விளக்கு சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தாம் வெற்றி பெற்றால் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.