அம்மாவை அடித்தால் போலீஸில் புகார் செய்வேன் - தந்தையை எச்சரித்த மகள்...வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பேரூராட்சியில் தூய்மை பணியாளராக உள்ள பெண்ணை அவரது கணவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அம்மாவை அடித்தால் போலீஸில் புகார் செய்வேன் - தந்தையை எச்சரித்த மகள்...வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டம்  வாள்வச்ச கோஷ்டம் பகுதியில் வசிப்பவர்கள் அனிஸ்- கிரிஷா தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவர் அனிஸ் கட்டுமான பணி செய்து வருகிறார். கிருஜா வாள்வட்ட கோஷ்டம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

மதுவிற்கு அடிமையான அனிஸ் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவர் மது பாட்டில் வாங்கி வந்து நண்பருடன் வீட்டில் வைத்து குடித்துள்ளார். அதை தட்டி கேட்ட மனைவியை நண்பன் முன்னேயே கணவர் அனிஸ் திட்டி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியநிலையில், மனைவியை கணவர் அனிஸ் கம்பால் அடித்ததாக தெரிகிறது. தன் கண் முன்னேயே அம்மாவை அப்பா அடிப்பதை பார்த்து கொதிதெழுந்த மூன்றாவது அதனை தனது அம்மாவின்   செல்போனில் படம்பிடித்தது மட்டுமல்லாமல், அம்மாவை இனி அடித்தால் போலீஸில் புகார் செய்வேன் என்றும்  அவர்கள் உங்களை அடித்து காவல்நிலையம் அழைத்து செல்வார்கள் என அந்த சிறுமி கூறியுள்ளார். 

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.